'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'என்ஜிகே'. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
யுவன் இசையமைத்த இரண்டு பாடல்கள் பல லட்சம் செலவு செய்து ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் என்ன காரணத்தினாலோ அந்தப்பாடல்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் செல்வராகவன்.
இந்த விஷயத்தை யுவன் சங்கர் ராஜாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக புதிதாக இரண்டு ட்யூன்கள் தருவதாக சொன்னார். அதன்படி இரண்டு ட்யூன்களைக் கொடுத்தார். தற்போது புதிதாக இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்திற்காக சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாடலை உமா தேவி எழுதியுள்ளார். மற்றொரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளார்.