Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா மீது பழைய கசப்பை மறந்த விஜய்

26 நவ, 2018 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Vijay-forgot-about-the-old-bitterness-on-Nayantara

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63 ஆவது படத்துக்கு தற்காலிகமாக 'தளபதி 63' என்று பெயரிடப்பட்டுள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.

விவேக், யோகி பாபு காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். லேட்டஸ்டாக இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு மற்ற படங்களில் வாங்கும் சம்பளத்தை விட கணிசமான தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

2009ல் வெளிவந்த 'வில்லு' படத்திற்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். வில்லு படத்தில் நடித்தபோது பாடல்காட்சி ஒன்று பாங்காக்கில் படமாக்கப்பட்டது. அப்போது நயன்தாரா நடந்து கொண்ட சில விஷயங்கள் பிடிக்காமல், அவர் மீது விஜய் கோபத்தில் இருந்தார் என்று அப்போது சொல்லப்பட்டது.

அதன் காரணமாக அதன் பிறகு தன்னுடைய படத்தில் நயன்தாராவுக்கு விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார். அட்லீ, விஜய்யிடம் பேசி அவருடைய மனதை மாற்றி நயன்தாராவை நடிக்க வைக்க ஒப்புதல் வாங்கினாராம்.

ஐரா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் உட்பட தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in