தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன்னுடைய நெருங்கிய நண்பரும், பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜை இயக்குநராக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்துள்ள படம் 'கனா'.
இப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இவருடன் சத்யராஜ், முனீஸ்காந்த், ரமா, அந்தோணி பாக்யராஜ், நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனித்திருக்க, நிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு முடிவடைந்துள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து 'கானா'வின் டிரைலரை கடந்த 25-ஆம் தேதி வெளியிட்டனர்.
'கனா'வை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். கனா படம் தனியாக வெளிவந்தால் தான் ஓரளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். பல படங்கள் வெளிவந்தால் கனாவுக்கு தியேட்டர்கள் கிடைக்காது. டிசம்பர் மாதம் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வருவதால் கனாவை சில வாரங்கள் தள்ளி வைக்கலாமா என்று சிவகார்த்திகேயன் தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல் அடிபடுகிறது.