ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த ஆந்திர முதல்வரும், பிரபல நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம் கதாநாயகுடு என்ற பெயரில் தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கும் இந்த படத்தில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
இப்படத்தில் என்டிஆருடன் நடித்த பல நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறது. அந்த வகையில், ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல்பிரீத் சிங் நடிக்க, சாவித்ரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.
மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.