ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
லைகாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 2.0. ரஹ்மான் இசையமைக்க, 3டியில் உருவாகி உள்ள இப்படம் வருகிற நவ.29ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இப்படத்தின் டீசர், டிரைலர்கள, பாடல்கள் வௌியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. பாடல்களில் லிரீக் வீடியோவும் வௌியாகி உள்ள நிலையில் தற்போது வீடியோ வடிவில் ஒரு பாடலை வௌியிட்டுள்ளனர்.
சிட்டி ரோபோவும், எமியும் ஆடி, பாடும் இந்திரலோகத்து சுந்தரியே பாடலின் வீடியோ வடிவை வௌியிட்டுள்ளனர். மிளிரும் வித்தியாசமான அரங்குகள், சயின்ஸ் பிக்சன் தொடர்பான கருவிகள், ஸ்பேஸ்சிப் மாதிரியான வாகனங்கள் என பாடல்களில் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார் ஷங்கர். இருந்தாலும் எந்திரன் படத்தில் வரும் பாடல்களுக்கு நிகரான பாடல்களோ அல்லது அரங்குகளோ இந்தப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. ஒரு வேளை மற்ற பாடல்களில் அல்லது படத்தில் பிரம்மாண்டம் காட்டியிருப்பார் என நம்பலாம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த பாடலின் வீடியோ வடிவம் வௌியிடப்பட்டுள்ளது. வௌியான இரண்டு மணிநேரத்தில் தமிழ் பாட்டை 3.87 லட்சத்திற்கு அதிகமானபேர் பார்த்துள்ளனர்.
Heres a surprise for all you people who have been eagerly waiting to see the robots shake a leg! The official video song of Endhira logathu sundariye is here now!https://t.co/StqlwnwqSw#2Point0 @2Point0movie @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson
— Lyca Productions (@LycaProductions) November 24, 2018