தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். நயன்தாரா, தம்பி ராமய்யா, சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
ஆனால் அசால்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்களும் வைரலாகின. இதை தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை. இந்நிலையில், இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதுகுறித்து அதன் இயக்குனர் பூபதி ராஜா கூறியதாவது:
நான் நடன இயக்குனராக இருந்து இயக்குனராகி இருக்கிறேன். அசால்ட் என்ற தலைப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குறும்படம் இயக்கினேன். அந்தப் படத்தை சிவகார்த்திகேயனுக்கு காட்டி உள்ளேன். தற்போது அந்த குறும்படத்தை திரைப்படமாக எடுத்து வருகிறேன். இதில் ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், செண்ட்ராயன், சோனா நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.
படத்தின் தலைப்பை கடந்த மார்ச் மாதம் கில்டில் பதிவு செய்திருக்கிறோம். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் அசால்ட் என்று பெயர் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பான போஸ்டர்களும் வெளியானது. ஆனால் இது படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை என்று அறிந்து ஆறுதல் அடைந்தேன். அதேசமயம், தயாரிப்பு தரப்பு இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதுதான் எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக கூறிவிட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றார்.