இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தன்னுடைய படநிறுவனத்தின் தயாரிப்பில் 'நான்', 'சலீம்', 'இந்தியா - பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்', 'சைத்தான்', 'எமன்', 'அண்ணாதுரை', 'காளி' சமீபத்தில் வெளியான 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இவற்றில் 'நான்', 'சலீம்' ஆகிய இரண்டு படங்களும் ஓரளவு பேசப்பட்டன. 'பிச்சைக்காரன்' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் வணிகரீதியில் வெற்றியடைந்தது.
ஆனால், விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான 'இந்தியா - பாகிஸ்தான்','சைத்தான்', 'எமன்', 'அண்ணாதுரை', 'காளி' போன்ற படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திமிரு புடிச்சவன்' படத்தில் விஜய் ஆண்டனி முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. ஆனாலும் மற்றொரு படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.
இப்போது 'கொலைகாரன்', மற்றும் நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்' படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இந்த இரண்டு படங்கள் தவிர 'காக்கி' என்ற மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். 'திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து 'காக்கி'யிலும் போலீஸ் வேடம் ஏற்கிறார் விஜய் ஆண்டனி.