ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த சர்கார் படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியானது. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு படம் திருப்தியைத் தந்தது.
அமெரிக்காவில் இதுவரை வெளிவந்த விஜய் படங்களைவிட அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டது. அங்கு இரண்டு வாரங்களில் 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த தெறி, மெர்சல் ஆகிய படங்களும் 1 மில்லியன் டாலர் வசூலித்தது. இப்போது மூன்றாவது படமாக சர்கார் படமும் 1 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது. மூன்றாவது வாரமாக அமெரிக்காவில் இன்னும் சில தியேட்டர்களில் சர்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட சர்கார் படம் அங்கும் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். இதனிடையே, சிலர் இப்படம் மெர்சல் படத்தின் வசூலான 250 கோடியைக் கடந்துவிட்டதாக தகவலைப் பரப்பி வருகிறார்கள்.