ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப், தனது மனைவி மஞ்சு வாரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை தொடர்ந்து, தன்னுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட. நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 நவம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்தார். சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் காவ்யா மாதவன்.
ஏற்கனவே திலீப்பிறகு முதல் மனைவி மூலமாக மீனாட்சி என்கிற மகள் இருக்கிறார் அல்லவா..? அவர் தற்போது திலீப் காவ்யா மாதவனுடன் தான் வசித்து வருகிறார். அவர் சம்மதத்துடன் தான் திலீப், காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்தார். திலீப் மகள் தான் தனது சிற்றன்னையின் (காவ்யா) வளைகாப்பையும் முன்னின்று நடத்தினார்.
தற்போது திலீப்-காவ்யா மாதவன் இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பையும் மீனாட்சிக்கே கொடுத்துவிட்டனர் தனது தங்கைக்கு மகாலட்சுமி என அழகான பெயரை சூட்டியுள்ளார் அக்கா மீனாட்சி. அந்தவகையில் எந்தவிதத்திலும் மீனாட்சியின் மனம் கோணாதபடி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்பு செலுத்தி வருகின்றனர் திலீப்-காவ்யா மாதவன் இருவரும்.