'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
நடிகர் அர்ஜுன் திரையுலகில் நுழைந்து, இந்த 37 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, அவ்வப்போது கன்னடம் என மூன்று மொழிகளில் மட்டுமே மாறிமாறி நடித்து வந்துள்ளார். ஒரே ஒருமுறை 'வந்தே மாதரம்' என்கிற மலையாள படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். அதுகூட தமிழ், மலையாளம் என இரு மொழி படமாக உருவானதால் தான்.
இந்தநிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அர்ஜுன். படத்தின் பெயர் ஜாக் டேனியல். நடிகர் திலீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஒரு பவர்புல் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதற்கேற்ற மாதிரி அவருக்கு தீனி போடும் விதமாக சண்டை காட்சிகளை வடிவமைக்க ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னை ஒப்பந்தம் செய்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது. அறிமுக இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.