ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா 'நோட்டா' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். விஜய், அஜித் படங்களைப் போலவே இப்படத்திற்கும் அதிகாலை காட்சிகள் நடந்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், இந்த அரசியல் படத்தில் குறிப்பிடும்படியான சிறப்பம்சம் எதுவும் இல்லாததால் படம் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
25 கோடி ரூபாய் அளவிற்கு இரு மொழிகிளிலும் வியாபாரம் நடைபெற்ற இந்தப் படம் அந்தத் தொகையை மட்டுமே வசூலித்துள்ளது. பங்குத் தொகையாக 12.5 கோடி மட்டுமே கிடைத்து 50 சதவீத நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் சுமார் 5 கோடியும், தெலுங்கில் 13 கோடியும் இந்தப் படம் வசூலித்துள்ளது. வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் என அந்த உரிமைகளில் நஷ்டத்திலிருந்து கொஞ்சம் தப்பித்திருக்கலாம். 'நோட்டா' தோல்வி விஜய் தேவரகொண்டாவை மீண்டும் தமிழில் நடிக்க கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.