இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று சிவா இயக்கத்தில் 4 வி செண்டிமென்ட் படங்களில் நடித்துள்ளார் அஜித். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், அடுத்தபடியாக ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் அஜித் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. சதுரங்கவேட்டை வினோத் இயக்குகிறார். ஆனால் இதை உறுதிப்படுத்தாத வினோத், எனது அடுத்த படம் குறித்த தகவலை பட நிறுவனமே வெளியிடும் என்றார்.
இந்த நிலையில், அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவே, அவரது ஐந்தாவது படத்தையும் இயக்கப்போவதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. வினோத் இயக்கும் படம் குறித்த தகவல் முடிவுக்கு வராததால், மீண்டும் சிவாவே அஜித்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இதுப்பற்றி விசாரித்தபோது, இது முற்றிலும் தவறான செய்தி என்கின்றனர். அஜித்தின் அடுத்தப்படம் வினோத் படம் என உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.