'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதியவர் வினோத் இயக்கத்தில், அமலாபால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் அதோ அந்த பறவை போல. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர், மாஸ்டர் பிரவீன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசை, செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
படம் பற்றி வினோத் கூறுகையில், இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார், அவர் படும் இன்னல்கள் என்ன என்பதை த்ரில்லராக சொல்லும் அட்வென்சர் படம்.
அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இந்தப்படம் ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார்.