வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. அறிமுகமான மலையாளத் திரையுலகத்தையும் மறந்து, பல கோடிகளைக் கொடுக்கத் தயாராக இருக்கும் தெலுங்கு திரையுலகத்தையும் அடிக்கடி துறந்து, தமிழ் சினிமாவில் மட்டும் உயர்ந்து இருப்பவர் நயன்தாரா.
சிரஞ்சீவி நடிக்கும் சைரா படத்திற்காக அவரை மிகவும் சிரமப்பட்டுதான் ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படத்தில் சைராவின் மனைவிய சித்தம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். நேற்று முன்தினம் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை யு டியூபில் வெளியிட்டார்கள். அதற்கான சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் அதற்கு 17 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.
நயன்தாரா பார்ப்பதற்கு ஒரு மகாராணி போல தெரிகிறார். இத்தனைக்கும் மோஷன் போஸ்டரில் அவருடைய முகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதற்கே இத்தனை வரவேற்பு என்றால் படத்தின் டிரைலர் வெளிவந்தால் மேலும் பெரிய வரவேற்பைப் பெறும் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
Wishing our very own gorgeous #Nayanthara a Very Happy Birthday. Here's the elegant look of #Siddhamma from #SyeRaaNarasimhaReddy. #HBDNayanthara #SyeRaahttps://t.co/5Zj9vN23Zu
— Konidela Pro Company (@KonidelaPro) November 18, 2018