பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் ஆண்டனியுடன் நடித்த காளி படத்தற்கு பிறகு பேரன்பு, நாடோடிகள்-2, லிசா, என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அஞ்சலி. அதேப்போல் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்து நந்தி விருது பெற்ற அஞ்சலி, தற்போது ஆனந்த பைரவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஹரி பாலாஜி இயக்கும் இந்தப்படம் திரில்லர் கதையில் உருவாகிறது. அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராய்லட்சுமியும், தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் கதைக்கு முக்கியத்துவமுள்ள ஒரு வேடத்தில் நடிக்கிறார்.