வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான ஆரவை காதலிப்பதாக சொன்னார் ஓவியா. அதனை ஆரவ் ஏற்கவில்லை. பிக்பாஸ் போட்டியில் ஓவியா தான் டைட்டீல் வின்னராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாகவே போட்டியில் இருந்து வெளியேறினார்.
மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் ஆரவுடனான நட்பை தொடர்ந்து வருகிறார் ஓவியா. இது காதலா என்று ஆரவ்வை கேட்டால் இல்லை என்கிறார். இருவம் நல்ல நண்பர்கள் என்கிறார்.
இந்நிலையில், தற்போது ஆரவ், ஓவியாவுடன் ஒரு பீச்சில் எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஹெலன் என்ற ஓவியாவின் பெயரை ஹெலு என்று குறிப்பிட்டு, ஹெலுவும் நானும் சூப்பர் மேனுடன் என்று ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை ஓவியா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.