இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கவிதாலயா தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், மீனா மற்றும் பலர் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்த படம் முத்து. அந்தப்படம் ஜப்பான் மொழியில் சப்-டைட்டிலிங் செய்யப்பட்டு 1998ம் ஆண்டு முத்து - ஒடோரு மகாராஜா - டான்சிங் மகாராஜா என்ற பெயரில் ஜப்பானில் வெளியிடப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின் ஜப்பானில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. தற்போது முத்து படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் நவம்பர் 23ம் தேதி மீண்டும் வெளியாக உள்ளது.
இது பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது. முத்து படம் ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அந்தப் படத்தை ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நவம்பர் 23ம் தேதியன்று மீண்டும் வெளியிட உள்ளார்கள்.
டிஜிட்டலில் 4 கே மற்றும் 5.1 சரவுன்ட் ஒலியமைப்பில் இப்படத்தைத் திரையிட உள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மேற்பார்வையில் படத்தின் ஒலியமைப்பு நடைபெற்றது.
முத்து படம் டிஜிட்டல் ரிலீஸ் தொடர்பாக நடிகர் ரஜினியை, கவிதாலயாவின் புஷ்பா கந்தசாமி சந்தித்து பேசியிருக்கிறார்.