தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'சர்கார்' படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். 'ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விவேக் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல், சில தினங்களுக்கு முன் வெளியானது. நயன்தாரா சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
நவம்பர்-18 நயன்தாராவின் பிறந்த நாள். ஏ.ஜி.எஸ்.நிறுவனத்தைச் சேர்ந்த வரும் 'விஜய்-63' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்பாத்தி அர்ச்சனா, நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்திருப்பதை வைத்து 'விஜய்-63' படத்தில் நயன்தாராதான் ஹீரோயினா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கெனவே விஜய்யுடன் 'சிவகாசி'(ஒரு பாட்டு), 'வில்லு' ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.
நயன்தாராவை தொடர்ந்து 'விஜய்-63' படத்தில் அருண் விஜய்யும் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.