ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், ஒ.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாகவும் இருக்கிறார்.
இருதினங்களுக்கு முன்னர் தனது பிறந்த நாள் என்பதால், நகரிக்கு வந்த ரோஜா, அந்த தொகுதி மக்களின் நலனுக்காக, நான்கு ரூபாயில் சாப்பாடு வழங்கும் நடமாடும் உணவகம் ஒன்றை துவங்கி வைத்தார். ஒய்.எஸ்.அண்ணா என பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகம், நகரி நகரின் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்திலும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு வழங்குவது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். இதே போல, கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.,க்களும் குறைந்த விலை உணவகத்தை திறப்பது குறித்து யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.