மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் சம்பத் ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், சம்பத் ராமுக்கு தற்போது திருப்புமுனையாக அமைந்திருக்கும் படம் 'திமிரு புடிச்சவன்'.
இதுவரை வில்லன், வில்லனின் அடியாள் கேரக்டரில் நடித்து வந்தவர், இதில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கிறார். சம்பத் ராமுக்கு போலீஸ் வேடம் புதிதல்ல என்றாலும், இதில் படம் முழுவதும் காமெடி மற்றும் சென்டிமென்டாக நடித்திருக்கிறார்.
வெற்றிமாறன் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'சங்கத் தலைவன்' மற்றும் 'காஞ்சனா 3' ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
"திமிருபுடிச்சவன் படத்தில் காமெடி கலந்த கேரக்டரில் நடித்திருந்தாலும், பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களைப் போல வில்லனாக நடிப்பில் பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள் ஆசை. பல வருடங்களாக அதற்காக நான் போராடி வருகிறேன்" என்கிறார் சம்பத்ராம்.