ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தான் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்துஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்த தான் நீக்கப்பட்டிருப்பதால் 96 படம் தான் தன்னுடைய கடைசி டப்பிங் படமாக இருக்க கூடும் என பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்திற்கு ஆண்டு சந்தா செலுத்தாததால் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளதாக கூறி உள்ளார். மேலும் சந்தா செலுத்தாதது தொடர்பாக சங்கம் எந்த அறிவிப்பும் வெளியடப்படவில்லை எனவும் 96 படமே தன்னுடைய கடைசி படமாக இருக்க கூடும் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் மீ டூ புகார் நாடு முழுவதும் பிரபலமானபோது தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.