டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய சில நினைவலைகள். எம்.ஜி.ஆர், சிவாஜி என சினிமாவில் இரு பெரும் மலைகளுக்கு நடுவில் நின்று வெற்றி பெற்று வந்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர், சண்டை போட்டு, டூயட் பாடி வெற்றி பெறுவார். சிவாஜி உயிரைக் கொடுத்து நடித்து வெற்றி பெறுவார். ஆனால் அலட்டிக் கொள்ளாமல் காதல் செய்து வெற்றி பெற்று விடுவார் ஜெமினி.
1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் 'மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த 'தாய் உள்ளம் என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர். .
எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன் தான். அந்தப் படத்தின் பெயர் ''மனம் போல் மாங்கல்யம்". ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.
ஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். ஜெமினி கணேசன் தயாரித்து, நடித்த ஒரே படம் நான் அவனில்லை.
கே.பாலசந்தரின் இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆருடன் முகராசி என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினி கணேசன்.
ஜெமினி கணேசனுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி ஆகிய மூன்று பேரும் தான். சாவித்திரி 25 படங்களிலும், சரோஜாதேவி 21 படங்களிலும், பத்மினி 19 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
ஜெமினி கணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். "கல்யாணப்பரிசு" வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினி கணேசன்.
1970-ம் பத்மஸ்ரீ' விருது பெற்றார். தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினி கணேசன், 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் நாள் காலமானார்.