இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆந்திர சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா சம்பந்தப்படட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில காட்சிகள் மீதம் உள்ளதாம். அந்த காட்சிகளை படமாக்க 3 நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அதனால் இன்னும் சில தினங்களில் சிரஞ்சீவியுடன் இணைந்து மீண்டும் நடிக்கிறார் அவர். அதோடு சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாராவிற்கான காட்சிகள் நிறைவு பெறுகிறதாம்.