'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சன்னி லியோன், கடனாவில் பிறந்து, வளர்ந்தவர். ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்து, பின்னர் பாலிவுட் நடிகை ஆகிவிட்டார்.
பாலிவுட் படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகளில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஆடினார். தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடித்த கருடவேகா படத்தில் ஆடினார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிக்க கூடாது என்று தமிழ்நாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது., கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஷால், சன்னி லியோனுக்கு ஆதரவளித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் அயோக்கியா படத்தில் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டெம்பர் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
இதில் விஷால் ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறர். வெங்கட்மோகன் என்ற புதுமுகம் இயக்குகிறார். டெம்பர் படத்தில் நோரா பதேகி என்ற கனடா மாடல் அழகி ஆடியிருந்தார். அந்த ஆட்டத்தில் தான் சன்னி லியோன் ஆட இருக்கிறாராம்