விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடிப்பில், பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள '2.0' இம்மாதம் 29-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.
இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இப்படம் சில தினங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. '2.0' படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இதற்கு முன் வெளியான 'எந்திரன்' படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'U' சான்றிதழ் வழங்கியிருந்தார்கள். அப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்துக்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன்?
லைகா தரப்பில் விசாரித்தபோது, 2.0 படத்தில் சண்டைக்காட்சிகளில் வன்முறை அதிகமாக இருப்பதாகவும், பாடல் காட்சிகளில் எமிஜாக்சனின் ஆடை அதிக கவர்ச்சியாக இருப்பதாலும் 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.