டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் வெற்றி நாயகன் விஜய் தேவரகொண்டா. நோட்டா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமானவர். அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இவரது நடிப்பில் தெலுங்கில் அடுத்து வெளியாக உள்ள படம் டாக்ஸிவாலா.
ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் பிரியங்கா ஜவால்கர், மாளவிகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காரை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படம் நவ., 17-ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாது சூர்யா உள்ளிட்ட பல தமிழ் திரைப்பிரபலங்களும் இப்படத்திற்கு தியேட்டரில் ஆதரவு தரும்படி குரல் கொடுத்து வருகின்றனர்.