இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகத்தில் திறமைசாலியான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, எழுத்து, இயக்கம், பாடுவது, இசையமைப்பது என அப்பாவைப் போலவே பலகலை நடிகராக இருக்கிறார். ஆனாலும், அவர் நினைத்த அளவிற்கு இன்னும் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நிலையை அவர் அடையவில்லை. அவருடைய சக போட்டியாளரான தனுஷ் விதவிதமான படங்களில் நடித்து சிம்புவை விட முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அனைவரும் வியக்கும் வண்ணம் சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்த ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அது போலவே சுந்தர்.சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தையும் சீக்கிரமே முடித்துக் கொடுக்க உதவியிருக்கிறார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சிம்பு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் காரை வாங்க இருக்கிறார். நேற்று இதற்கான டெமோவை பார்த்தார் சிம்பு. முன்னதாக அவர் புக்கிங் செய்துள்ளார். இன்னும் ஓரிரு நாளில் காரை டெலிவரி எடுக்கிறார். தற்போதைய நடிகர்களுக்குள் யார் விலை உயர்ந்த காரை வைத்திருப்பது என்பதிலும் ஒரு போட்டி இருக்கிறது. இந்த வகையான காரை முதல் முறையாக வாங்கும் நடிகர் சிம்புதானாம்.