ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் - கமல் கூட்டணியில் வெளியான வெற்றி படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 22 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிறது. ஷங்கர், கமலே தொடருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
முதற்கட்டமாய் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. கமல் இரண்டு வேடங்களில் நடிப்பார் என தெரிகிறது. இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் நடிக்கவிருக்கும் காட்சிகளை உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளில் படமாக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படம் பற்றி தினம் ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஹீரோயின்களாக நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படும் வேளையில், மலையாள நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடிகர் சிம்புவும், இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இசையமைப்பாளர் அனிருத் மூலம், சிம்புவை, நடிக்க வைக்க ஷங்கர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, ஷங்கர் இயக்கிய, நண்பன் படத்திலேயே சிம்பு நடிக்க வேண்டியது. அன்றைய சூழலில் சிம்பு மறுத்துவிட்டார். ஆனால் இந்தமுறை, கமல் - ஷங்கர் - லைகா என பிரம்மாண்ட கூட்டணி இணைந்துள்ளதால், சிம்பு நிச்சயம் தவறவிட மாட்டார் என்கிறார்கள்.