பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த முனி படங்களின் வரிசைகள் சூப்பர் ஹிட்டாகின. அந்தவகையில் ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது முனி 4 (காஞ்சனா 3) உருவாகி வருகிறது. ஓவியா, வேதிகா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர முழுமையாக முடிவடைந்து விட்டது. மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோடையை குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள். அந்தவகையில் இந்த கோடையை கொண்டாடும் விதமாக முனி 4, ஏப்ரல் மாதம் 18-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.