600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இந்தியத் திரையுலகின் மிகப் பெரும் பட்ஜெட் படமான '2.0' இன்னும் 15 நாட்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. மற்ற திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் வியக்கும் வண்ணம் இந்தப்படம் உருவாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் தான் இதுவரையில் அதிக பட்ஜெட் படங்களாக இருந்தது. அந்தப் படத்திற்கு தெலுங்குத் திரையுலகமே பெரும் ஆதரவு கொடுத்து பாராட்டியது.
இப்போது தமிழ்த் திரையுலகத்தில் 'பாகுபலி' படங்களை மிஞ்சும் அளவிற்கு '2.0' படம் 550 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இப்படத்தை தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கூட இன்னும் அதிகமாகப் பாராட்டவில்லை. ஆனால், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பாராட்டியுள்ளார்கள்.
ஏற்கெனவே, மகேஷ்பாபு '2.0' பட டிரைலரைப் பற்றி வியந்து பாராட்டியிருந்தார். நேற்று நாகார்ஜுனா 'புல்லினங்கால்' பாடலின் தெலுங்கு பாடலைப் பாராட்டியிருக்கிறார். அப்பாடலை தெலுங்கில் 'பாகுபலி' இசையமைப்பாளரான கீரவாணி பாடியிருக்கிறார். அவரது குரலையும், ரகுமானின் இசையையும் அவர் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
2.0 படத்தைத் தெலுங்கிலும் நேரடிப் படம் போலவே வெளியிட உள்ளார்கள். தெலுங்கு டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.