தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1980-90களில் மலையாள சினிமாவை கலக்கியவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. இவரது வாழ்க்கை வரலாறு படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரிச்சா சாதா என்பவர் ஷகீலா வேடத்தில் நடிக்கிறார். ஷகீலாவும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் படம் குறித்த அனுபவத்தை ரிச்சா கூறியிருப்பதாவ : ஷகீலா கவர்ச்சி நடிகை என்பதால் முதலில் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டியதிருக்குமே என்று சற்று தயங்கினேன். ஆனபோதும் ஒருவரது வாழ்க்கை வரலாறு என்பதால் பின்னர் என் மனநிலையை மாற்றிக்கொண்டு நடித்தேன்.
ஷகீலா நடித்த படங்களை பார்த்ததோடு நிஜ வாழ்க்கையில் அவரைப்பற்றி அவரிடமே கேட்டறிந்து கொண்டு நடித்தேன். அதனால் இந்த படத்தில் என்னை ஷகீலாவாகவே பார்க்கலாம். அந்த வகையில், இந்த படத்தில் நடித்தது ஒரு கவர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. படத்தை திரையில் காண ஆர்வமாய் உள்ளேன் என்கிறார்.