சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
மீடூ விவகாரத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜாதிய கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அவருக்கு பதிலடியாக தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
சமீபத்தில் சகோதரர் அமீர் கூறியதைக்கேட்டேன். என்னைக்குறிப்பிட்டு சில வார்த்தைகளை கூறியிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன இந்த தருணத்தில், ஜாதி வன்மம் கொண்ட அமீர் பேசிய வார்த்தைகள் தான் வேதனையளிக்கிறது. அவர் இப்பொழுது தொடுத்த ஜாதிய விஷமார்ந்த அம்பு ஒருநாள் அவரை நோக்கியும் பாயலாம். கைதட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக் கொண்டிருக்கும் ஜாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.