பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 2௦15ல் கிறிஸ்துமஸ் வெளியீடாக திலீப் நடிப்பில் வெளியான படம் தான் '2 கண்ட்ரீஸ்'. படத்தின் இயக்குனர் ஷபியும், கதாசிரியர் ரபியும் படம் முழுவதும் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்திருந்ததால் மவுத் டாக் வழியாகவே இந்தப்படம் பிக்கப் ஆனது. அந்தவிதமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ஓடி வசூலையும் வாரிக்குவித்தது..
அந்த சமயத்தில் அதற்குமுன் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் திலீப்பை, இந்தப்படம் நிமிர்ந்து உட்கார செய்தது. தற்போது இந்தப்படத்தை பற்றி இவ்வளவு சொல்வதற்கு காரணம், இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாராகி விட்டார்களாம் திலீப் - ஷபி - ரபி கூட்டணியினர். அதேபோல வழக்கமாக பார்ட்-2 என்பது போல பெயர் வைக்காமல், இந்தமுறை 3 கண்ட்ரீஸ் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.