'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்த கத்தி படத்தைப் போலவே சர்கார் படமும் கதை சர்ச்சையில் சிக்கியது. அதையடுத்து, மெர்சலைத் தொடர்ந்து சர்கார் படமும் அரசியல் ரீதியான சர்ச்சைகளை சந்தித்தது. தற்போது படம் சிறப்பான வசூலை தந்து கொண்டு இருக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜய்யின் 63-வது பட வேலைகளை தொடங்கியிருக்கிறார் அட்லி. ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
சஸ்பென்ஸ், த்ரில்லர் நிறைந்த இந்தக்கதையில், சிபிஐ அதிகாரியாக விஜய் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடலின் வரிகளை தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.