'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார் நடித்துள்ள படம் 2.0. நவம்பர் 29-ந்தேதி திரைக்கு வரும் இந்த படம் உலகமெங்கிலும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அதோடு, தமிழகத்தில் இந்த படத்தின் 3டி படம், 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் டீசர், டிரைலர் இரண்டையும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்ற சமூக வலைதளங்களில் இதுவரை 14 கோடி பேர் பார்த்துள்ளதாக படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.