டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் பூஜையுடன் துவங்கின. கமல் - ஷங்கர் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 உருவாகிறது. தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் துவங்கி உள்ளன. முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கமல், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார்.
இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி, படத்தின் கதைக்களம் அமைய இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளன. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இந்த பணிகளை மேற்கொள்கிறார். அவர், டுவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
2.0 படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் அல்லது இருவருமே நடிக்கலாம் என தெரிகிறது.