சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
போடா போடி, நானும் ரவுடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் நெருக்கமான நண்பர் மற்றும் காதலர். விக்னேஷ் சிவன், தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக இந்திய அணி கேப்டன் தோனியின் வெறிபிடித்த ரசிகர். அடிக்கடி தனது டுவிட்டரில் தோனியை புகழ்ந்து தள்ளுவார். ஒரு முறை தனது டுவிட்டரில்...
"தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும்... மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத தூயவர். அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வர வேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தோனியை நேரில் சந்தித்தார் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு அதுகுறித்து கூறியிருப்பதாவது:
தோனியைக் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே சந்தோஷமான, மிகவும் திருப்தியான தருணம் இது. இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர் ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன். அது என்னுடைய கனவு. என தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.