‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பசங்க, வம்சம், மெரினா படங்களை இயக்கிய பாண்டிராஜ், அடுத்த ஹீரோவாக நடிக்க போகிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. உண்மை அறிய, அவரையே சந்தித்து கேட்டோம். அவர் சொன்னது, மெரினா படத்தை இயக்கி முடித்தபோது, சிலர் கதைகளுடன் என்னிடம் வந்து ஹீரோவாக நடிக்க கேட்டது உண்மை தான். ஆனால் எனக்கு நடிப்பில் ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. அந்த மாதிரி விபரீத ஆசை ஏதும் எனக்கில்லை. டைரக்ஷ்ன் வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருந்தால் போதுமென்று நினைக்கிறேன் என்றார் பாண்டிராஜ்.
அடுத்து, தனுஷ், ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்களை இயக்க உங்களுக்கு வாய்ப்பு வந்ததாகவும், அதை நீங்கள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, மெரினா படத்துக்குப் பிறகு நீங்கள் சொன்ன அந்த மூன்று ஹீரோக்களை வைத்து படம் பண்ண எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர்களுக்கு ஏற்ற கதைகள் என்னிடம் இல்லாததால், தவிர்த்துவிட்டேன் என்றார்.