டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சண்டக்கோழி-2, சர்கார் படங்களில் அதிரடி வில்லியாக மிரட்டியவர் வரலட்சுமி. இதில் சர்கார் படத்தில் கோமளவள்ளி என்ற பெயர் கொண்ட கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அந்த பெயர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று சொல்லி அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், தற்போது தனுஷின் மாரி-2 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இதுவும் வில்லி வேடம்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாரி-2 வரலட்சுமியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளராக விஜயா என்ற அரசு அதிகாரியாக அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.