ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படத்துக்கு படம் வில்லன் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவுக்கே வில்லன் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம். வெளியாகும் புதிய தமிழ் படங்களை அன்றைய தினமே இணைதளங்களில் பதிவேற்றி தமிழ் சினிமாவுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள். விஜய், அஜீத், ரஜினி, கமல் படங்களை சவாலாக அறிவித்து குறிப்பிட்ட நாளில் வெளியிடுகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த சர்கார் படத்தை ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படி வெளியிட்டு காட்டினார்கள். இந்த இணைய தளத்தை நடத்துவது யார்? எங்கிருந்து நடத்துகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சினிமா திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரஜினி நடிப்பில் 600 கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் 2.ஓ படத்தை வெளியாகும் அன்றே வெளியிடுவோம் என்ற தமிழ் ராக்கர்ஸ் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்பு தைரியமாக இருந்தது. காரணம் 2.ஓ 3டி தொழில்நுட்பத்திலும் 4டி ஆடியோவிலும் வெளிவருகிறது. இதனால் இணையதளங்களில் இதனை பதிவேற்றினாலும் செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ இதனை பார்க்க முடியாது.
இந்த நிலையில் 2.ஓ படத்தை வெளியிடுவதாக நாங்கள் அறிவிக்கவில்லை என தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் முகப்பில் வைக்கப்பட்டுள்ள சின்ன பெட்டியில், இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
டுவிட்டரிலோ மற்ற சமூகவலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூகவலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள். என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.