தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்திற்காக நரைத்த தாடி, மீசையுடன் காணப்பட்ட அஜித், படப்பிடிப்பை முடித்ததும், அதை ட்ரீம் பண்ணி உள்ளார். படம், பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.