'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சரவணன், மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்து பிறகு நிஜ வாழ்க்கையிலும் இணைந்தவர்கள் சரவணன், ஸ்ரீஜா ஜோடி, சரவணன் மீனாட்சிக்கு முன்பே இருவரும் மதுரை என்ற சீரியலில் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போதிருந்தே காதலித்தவர்கள், சரவணன் மீனாட்சிக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனான நடித்த செந்தில், அதன் பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவைகள் வெற்றி பெறவில்லை.
பிறகு மாப்பிள்ளை சீரியலில் நடித்தனர். ஆனால் என்ன பிரச்சினையோ தெரியவியல்லை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே அந்த சீரியல் முடிந்து விட்டது. அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடிக்க இருந்தர்கள்கள் ஆனால் என்ன காரணத்தாலோ ஸ்ரீஜா அந்த தொடரில் நடிக்கவில்லை. செந்தில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது இருவரும் இணைந்து கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார்கள். இது செந்தில், ஸ்ரீஜாவின் நிஜ காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை கதை என்கிறார்கள்.