பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த ஆண்டு வெளிவந்த கன்னடப் படம் ஹெப்புலி. இதில் சுதீப், அமலாபால், வி.ரவிச்சந்திரன், பி.ரவிசங்கர், கபிர் சிங், ரவி கிஷன் உள்பட பலர் நடித்திருந்தனர். அர்ஜுன் ஜென்யா இசை, ஏ.கருணாகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.ஆர்.வி.புரொடக்ஷன் சார்பில் ரகுநாத், உமாபதி தயாரித்திருந்தார்கள். எஸ்.கிருஷ்ணா இயக்கி இருந்தார்.
ஒரு ராணுவ தளபதி தனது அண்ணனை கொன்று தற்கொலை என்று கதை விட்டவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிற கதை. இதில் சுதீப் ராணுவ தளபதியாகவும், அமலாபால் டாக்டராகவும் நடித்திருந்தனர். ஒரு கிரைம் த்ரில்லர் படமாக வெளிவந்து வெற்றி பெற்ற படம். கன்னடத்தில் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி வரை வசூலித்த படம். தற்போது இந்தப் படத்தை பொய்யாட்டம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். ஏஆர்கே.ராஜ ராஜா மொழிமாற்று பணிகளை செய்கிறார். வி.எஸ்.இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.