Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்காருக்கு எதிர்ப்பு : ரஜினி கண்டனம்

09 நவ, 2018 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Rajini-expresses-his-views-on-Sarkar-controversy

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம், தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அதிமுக.,வினர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள சர்கார் பட பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சில தியேட்டர்களின் முகப்பு கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் சில ஊர்களில் இது தொடர்கிறது.

இந்நிலையில் சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்திருக்கிறது. சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக., அரசு தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் ரஜினியும் டுவிட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் ரஜினி கூறியிருப்பதாவது : தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.


விஷால்


விஷால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : இயக்குனர் முருகதாஸ் வீட்டில் போலீசா? எதற்காக? எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்புகிறேன். மீண்டும். சென்சார் படத்திற்கு ஒப்புதல் அளித்து மக்கள் பார்த்துள்ளனர். அப்படி இருக்க இந்த கூப்பாடு ஏன்?


ஜிவி பிரகாஷ்


ஜிவி பிரகாஷ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். எதற்காக சென்சார் உள்ளது.Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இப்போதைக்கு திருமணம் இல்லைஇப்போதைக்கு திருமணம் இல்லை தமிழில் வெளிவருகிறது அமலாபாலின் கன்னடப் படம் தமிழில் வெளிவருகிறது அமலாபாலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

krish - chennai,இந்தியா
11 நவ, 2018 - 06:49 Report Abuse
krish ரஜனியின் ஒருதலை பட்ச விமர்சனம் உள்நோக்கம், சுயநலம் சார்ந்தது. தான் நடித்த 2.௦ படத்திற்கு விஜய் ரசிகர்களும் ஆதரவு அளித்தால்தான், அப்படம் பெரிய வெற்றி அடையும் என்று உணராதவரா ரஜினி. மேலும், தான் நடித்த எந்திரன் படம் படைப்பாளி சன் பிக்ச்சர்ஸ் கலாநிதிமாறன் பால் உள்ள நன்றி உணர்வு வெளிக்கொணர ஒரு உன்னத வாய்ப்பு அல்லவா. மேலும் அரசியல் களத்தில் இறங்க இன்னும் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், விஜயையும், அவர் கண்மூடி ரசிகர் பட்டாளத்தையும் கண்டு கொள்ளாமல் இருந்தால், அது கமலுக்கு ஆதரவாக, அவருக்கு (தேர்தல் அரசியலில்) எதிராக பயணிக்க வாய்ப்பு உள்ளது எனபதை அறியாதவரா? ஆக மொத்தம், தற்சமயம், தர்ம அடிக்கு தகுதியானவர், ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டி அதிமுக அரசுதான் என்று முடிவு எடுத்து செயல்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. வன்முறையை, கருத்து சுதந்திரத்தை திரையில் காண்பித்து வருமானம் ஈட்ட நினைப்பவர்கள், அதே வன்முறையை, கருத்து சுதந்திரத்தை எதிர்கொள்ளவேண்டியது காலத்தின் அலங்கோலமே, நிர்பந்தமே. வினை விதைத்தவர், வினை அறுக்க வேண்டியுள்ளதே .
Rate this:
09 நவ, 2018 - 12:31 Report Abuse
பாரதன். சூப்பர் ஸ்டார் அவர்களே! படத்தில் இலவசங்களைப் பற்றி ஏன் பொதுவான காட்சிகளை வைக்கவில்லை என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொடுத்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி யையும் தீயில் இட்டு எரிப்பது போல் காட்டவில்லை என்றும் நீங்கள் கேட்டிருக்க வேண்டாமா?
Rate this:
09 நவ, 2018 - 15:25Report Abuse
பாரதன்.சினிமா என்பது மக்கள் சாதனம். மக்கள் ரசனைக்கேற்ப மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களுக்கான சாதனம். அந்த சினிமாவை ஒரு அரசியல் கட்சியைப் போல் நடத்தினால் இதுதான் கதி. அரசியல் பேசவேண்டும் என்றால், சினிமாவை மூட்டை கட்டி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in