ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2006ல் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் அனுஷ்கா. அதன்பிறகு வேகமாக வளர்ந்த அவர், பாகமதி படத்திற்கு பிறகு உடல் பருமன் காரணமாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். அதோடு, உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டி வந்தார். இந்த இடைவெளி காரணமாக, அனுஷ்கா திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில், தற்போது மாதவன் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இப்படத்தை தயாரிக்கும் கோனா வெங்கட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்குகிறார். அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் - அனுஷ்கா மீண்டும் இணைகிறார்கள்.
இப்படத்திற்கு சைலன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகும் என தெரிகிறது. அனுஷ்காவின் பிறந்த நாளான நேற்று அவரின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.