அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கடந்த சில வாரங்களுக்கு முன் நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் 'காயம்குளம் கொச்சுன்னி' என்கிற படம் வெளியானது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் விதமாக அமைக்கப்பட்டிருந்த இதன் கதையும் (உண்மை சம்பவம் தான்) அதை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் படமாக்கிய விதமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. நிவின்பாலியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
அதேசமயம் இந்தப்படத்தில் நடிப்பதற்காக முதன்முதலாக ஹிந்தியில் இருந்து தேடிவந்த வாய்ப்பையும் நிவின்பாலி கைவிட வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் சரியான திட்டமிடலுடன் தான் அந்த ஹிந்திப்படத்தில் நடிக்க சம்மதித்து இருந்தார் நிவின்பாலி. ஆனால் காயம்குளம் கொச்சுன்னி படப்பிடிப்பின்போது அவருக்கு காலில் அடிபட்டதால் படப்பிடிப்பை ரத்து செய்து ஓய்வெடுக்கும்படி ஆனது.
பின்னர் மீண்டும் காயம்குளம் கொச்சுன்னி படப்பிடிப்பை தொடர்வதற்காக, அவர் ஏற்கனவே இந்திப்படத்தில் நடிக்கலாம் என ரிசர்வ் செய்து வைத்திருந்த தேதிகளை கொடுக்க வேண்டி இருந்ததால் அந்த ஹிந்திப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது