ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அதிகளவிலான படங்களில் நடிக்கவிட்டாலும் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார் லட்சுமி ராய். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கிறார். தற்போது, நீயா 2, உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
வினோ வெங்கடேஷ் இயக்கும் படத்திலும் லட்சுமி ராய் நடிக்கிறார். இப்படத்திற்கு சின்ட்ரல்லா என பெயர் வைத்துள்ளனர். திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் பைக் ஓட்டியபடி பேய் தோற்றத்தில் லட்சுமி ராய் உள்ளார்.
படத்தில் இசைக்கலைஞராகவும், பேயாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார் லட்சுமி ராய். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்.