தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
செக்கச் சிவந்த வானம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு, சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அத்திரண்டிகி தாரேதி ரீ-மேக்காக இந்தப்படம் உருவாகி வருகிறது.
சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், கத்ரினா தெரஸா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தலைப்பு வைக்காமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு வந்தா ராஜாவாதான் வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. அதோடு படம் பொங்கலுக்கு வெளிவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.