'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் சர்கார். ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஏதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, சர்கார் படம் உலகம் முழுக்க ரிலீஸாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 700-க்கும் அதிகமான தியேட்டர்களிலும், இந்தியா முழுக்க 3000 தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது.
தீபாவளியையொட்டி, அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சில ஊர்களில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சென்னை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
பல ஊர்களில் விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை திருவிழா போன்று கொண்டாடி மகிழ்கின்றனர். மேள தாளங்கள் முழங்க, அதிரடி ஆட்டம், பாட்டு மற்றும் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.