தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீதி, நேர்மை, நியாயம் என சினிமாவில் தங்களது ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் ஹீரோக்கள் அதை நிஜ வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. விஜய் நடித்து நாளை வெளிவர உள்ள சர்கார் படத்தின் கதை ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியது. இப்போது படத்தின் டிக்கெட் விலையை பிளாக்கில் விற்க நிர்பந்தப்படுத்துகிறார்கள் என தியேட்டர் ஒன்று வெளிப்படையாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் உள்ள ராணி தியேட்டரின் டுவிட்டரில், சர்கார்' படத்தை நாங்கள் எடுக்கவில்லை. படத்தின் டிக்கெட்டை முதல் இரண்டு நாட்களுக்கு 200 ரூபாய்க்கு மேல் பிளாக்கில் விற்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் நல்ல சினிமாவை எப்போதுமே நெறிமுறையுடன் வழங்க விரும்புகிறோம். விஜய் என்ன உபதேசம் செய்கிறாரோ அதை கடைபிடிக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
Since we have not agreed to "Sarkar" Distributor's condition of selling all tickets in Black for more than Rs.200 for the 1st 2 days, we will not screen Sarkar.
We always want to provide good cinema in an Ethical Manner. Actor Vijay should practice what he preaches.@actorvijay
— Ranee Paradise 4K 3D AC DTS (@4kRanee) November 3, 2018